என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாணவி கர்ப்பம்"
கோவை:
கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியின் வயிறு பெரிதாக காணப்பட்டதால் அவரது பெற்றோர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதனையில் மாணவி 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் மாணவியின் கர்ப்பத்துக்கு அவரது அண்ணன் தான் காரணம் என்பது தெரியவந்தது. 18 வயதாகும் அவர் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இதைத்தொடர்ந்து மாணவியிடம் விசாரணை நடத்திய போலீசார் மாணவியின் அண்ணன் மீது பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு சிறப்பு சட்டம் (போக்சோ) 2012-ன் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார்.
விருதுநகர்:
விருதுநகர் கலைஞர் நகரைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் பாண்டி (18) என்பவரும் படித்து வந்தார். இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது.
பாண்டியுடன் நெருங்கி பழகியதில் மாணவி 6 மாத கர்ப்பமானார். இதனை தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மாணவி வற்புறுத்தினார்.
ஆனால் மாணவர் பாண்டி திருமணத்திற்கு மறுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் பாண்டியை கைது செய்தனர்.
கோபி:
திருப்பூர் மாவட்டம் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி நம்பியூரில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி பிளஸ்-1 படித்து வந்தார்.
மாணவி விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு சென்ற போது அங்கு உறவினர் ஒருவரின் மகனான செந்தில் என்பவர் மாணவிக்கு ஆப்பிள் ஜீஸ் கொடுத்தார். அப்போது அதில் மயக்க மருந்து கலந்ததால் மயங்கிய மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இந்நிலையில் மாணவிக்கு உடல் நலம் சரியில்லாமல் போகவே நம்பியூர் மற்றும் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சென்ற போது மாணவி கர்ப்பமாகி இருந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சின்னதங்கம் வழக்குபதிவு செய்ய விசாரணை நடத்தினார். தலைமறைவான வாலிபர் செந்திலை போலீசார் ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்